Rituals Library

Kammavar Naidu ceremonies in our own words — the story behind each one, how it is kept, and the reasoning our elders gave. Shown in Tamil with an English reading alongside.

Language
Childbirth

புருண்டு (பன்யோஜனம்)Punyojanam (Naming & First Outing)

குழந்தையின் நலத்திற்காகவும், தாயின் நலத்திற்காகவும் செய்யப்படும் சடங்கு தான் ‘புருண்டு’ எனப்படும். குழந்தை பிறந்த 7, 9 அல்லது 11 ஆம் நாளில் செய்ய வேண்டும். சிலர் ஐயர் வைத்துப் பன்யோஜனம் செய்வார்கள்; கீழ்க் கூறிய சாங்கியம் செய்த பின்னர் ஐயர் புனியோஜனம் செய்து தீர்த்தம் கொடுப்பார்.The rite done for the well-being of both child and mother is called 'Purundu'. It is performed on the child's 7th, 9th or 11th day. Some have a priest (aiyar) do the punyojanam — after the rite below, he performs it and gives theertham.
  1. 1
    தயார் செய்ய வேண்டியவைWhat is made ready
    ¼ படி நவதானியம்; காயம் பொடி எனப்படும் சுக்கு, மிளகு, வெல்லம் சேர்த்துப் பொடித்த பொடி; கொள்ளுப் பருப்பு; ஒரு மண்சட்டி; 2 மணவிளக்கு; வெற்றிலை பாக்கு; பூ; மஞ்சள் பொடி; குங்குமம்; கற்பூரம்; ஊதுபத்தி; மஞ்சள் சரடு; 1 டம்ளர் மோர்; 1 கொத்து வேப்பிலை ஆகியவற்றைத் தயாராக வைக்க வேண்டும்.A quarter-padi of navadhaniyam; the powder called kaayam-podi (dry ginger, pepper and jaggery ground together); horse-gram dal; an earthen pot; two manavilakku lamps; vetrilai-paaku; flowers; turmeric powder; kungumam; camphor; incense; turmeric thread; a tumbler of mor; and a bunch of neem leaves.
  2. 2
    குழி அமைத்தல்Digging the pit
    வீட்டிற்கு வெளியே, ஜலமூலையில், பூமியில் ஒரு அடி சதுரத்தில் ஒரு குழி உண்டாக்கி, சமமாக இருக்கும்படி செய்ய வேண்டும். அந்தக் குழியில் மஞ்சள் நீர் தெளித்து, 3 கூழாங்கற்களைக் கழுவி வரிசையாக வைக்க வேண்டும்.Outside the house, in the water-corner (jala moolai), a one-foot-square pit is dug level in the earth. Turmeric water is sprinkled in it and three washed pebbles are set in a row.
  3. 3
    பூஜைThe puja
    சாப்பாட்டுடன் காயம் பொடி சேர்த்துப் பிள்ளையாராகப் பிடித்து வைக்க வேண்டும்; ஒரு மஞ்சள் பிள்ளையாரும் பிடித்து வைக்க வேண்டும். இந்த ஐந்து சாமிகளைக் குழிக்குள் வைத்து, அவர்களைச் சுற்றி ஒரு மஞ்சள் சரடு சுற்ற வேண்டும். மஞ்சள் பொடியில் ஆர்த்தி கரைத்து வைக்க வேண்டும். சாமிகளுக்குப் பூ வைத்து விளக்குகளை ஏற்றி, ஒரு தட்டில் புடவை, ரவிக்கை, வெற்றிலை பாக்கு, பழம், பூ, கொள்ளுப் பருப்புச் சாப்பாடு சேர்த்து வைத்து, புருண்டு செய்யும் பெண் பூஜை செய்ய வேண்டும். பின்னர் முத்துப் பவளத்தைக் குழிக்குள் வைத்து, பெண்ணிற்கும் குழந்தைக்கும் ஆர்த்தி சுற்ற வேண்டும்.Rice mixed with kaayam-podi is shaped into a Pillaiyar, and a turmeric Pillaiyar is also made. These five deities are placed in the pit and a turmeric thread wound around them. Aarathi is dissolved in turmeric powder. Flowers are offered, lamps lit, and the woman performing the punyojanam does the puja with a plate of pudavai, ravikkai, vetrilai-paaku, fruit, flowers and horse-gram rice. Then pearl and coral are placed in the pit and aarathi circled for mother and child.
  4. 4
    குழி மூடி, குழந்தையை வெளியே எடுத்தல்Closing the pit, taking the child out
    சட்டியைக் கல்லில் உடைத்து, ஒரு சிறு துண்டு ஓட்டை எடுத்துக் குழியை நன்றாக மூடிவிட வேண்டும். குழியின் மேல் அந்த ஓட்டை வைத்து, தாய் 3 முறை குழியை மிதிக்க வேண்டும். தாயின் கையில் வேப்பிலைக் கொத்தைக் கொடுத்து, குழியின் மேல் மோர் விட்டு மூன்று முறை கும்பிட்டதும், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, வீட்டின் முன்வாசல் வழியாகக் குழந்தையை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.The pot is broken on a stone, a potsherd taken, and the pit closed well. The sherd is set over the pit and the mother treads on it three times. A bunch of neem leaves is placed in her hand; mor is poured over the pit; after worshipping three times she draws her veil over her head and carries the child in through the front door of the house.
    Why: முதல் முறையாகக் குழந்தை வீட்டின் வாசல் தாண்டி உள்ளே வரும் தருணம்.This is the moment the child first crosses the threshold into the home.
  5. 5
    அரைஞாண் கட்டுதல்Tying the arai-gnaan
    ஒரு பெரிய தட்டில் அரிசியைப் போட்டு, அதன் மேல் ஒரு விரிப்பினை விரித்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, முதலில் அத்தை முறையில் உள்ள பெண் மஞ்சள் நூலில் அரைஞாண் கட்ட வேண்டும்; பின்னர் மற்றவர்கள் நகை போடலாம். குழந்தைக்குத் தலை வாசல் படியில் சிறிது நீர் விட்டு உரசி, அதை முதலில் நெற்றியில் பொட்டு வைத்துப் பின்னர் கருப்புப் பொட்டு வைக்க வேண்டும்.On a large plate of rice a cloth is spread and the baby laid on it. The paternal aunt (atthai) first ties an arai-gnaan (waist-thread) of turmeric string; then others may add jewellery. A little water from the doorstep is rubbed on the child, a pottu placed on the forehead, and then a black dot (to ward off the evil eye).
  6. 6
    தண்ணீர் தொட்டி பூஜைThe water-pot puja
    தண்ணீர் தொட்டியின் மேல் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அத்துடன் 3 சாணிப் பிள்ளையாரும் வைக்க வேண்டும். தேங்காய் உடைத்துப் பூஜை செய்து, சாணிப் பிள்ளையார் மேல் நவதானியம், வெற்றிலை பாக்கு வைத்து, மோர் விட்டுக் கும்பிட வேண்டும். பின்னர் மூன்று பெரும் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து சமையல் அறையில் உள்ள பாத்திரங்களில் ஊற்ற வேண்டும். அதன் பின்னர் தான் பெண் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் புழங்கலாம்.On the water pot a turmeric Pillaiyar and three cow-dung Pillaiyars are set. A coconut is broken, puja done, navadhaniyam and vetrilai-paaku placed on the dung Pillaiyars, mor poured and worship offered. Water is then fetched in three large pots and poured into the kitchen vessels. Only after this may the woman move freely through the whole house again.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Childbirth

பிட்ட சாங்கியம் (குழந்தைச் சீர்)Pitta Sangiyam (Child Seer)

தாய் வீட்டில் மகப்பேற்றினை முடித்துக் கொண்டு, குழந்தையுடன் கணவன் வீடு திரும்பும் பெண்ணுக்கு, பெற்றவர்கள் செய்யும் சாங்கியமே பிட்ட சாங்கியம் எனப்படுவது. கம்ம குலப் பெண்ணின் வாழ்க்கையில் அவளுக்குச் செய்யப்படும் சிறப்புச் சீர்களில் இதைத்தான் கடைசியாகச் செய்யப்படுவது. குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11 ஆம் மாதங்களில் இச்சீரைச் செய்யலாம்.The seer her parents perform for a woman who has completed her confinement at her mother's home and is returning to her husband's house with the baby. Of all the special seers done for a Kamma woman across her life, this is the last one. It may be done in the child's 5th, 7th, 9th or 11th month.
  1. 1
    எப்போது செய்ய வேண்டும்When it must be done
    இந்தக் காலத்தில் இந்தச் சடங்கை எப்போது வேண்டுமானாலும் செய்கிறார்கள். பெண் குழந்தையாக இருந்தால், கௌரி விரதம் என்னும் உத்தாபிஞ்சேதி சாங்கியம் செய்வதற்கு முன்பே இந்தப் பிட்ட சாங்கியம் செய்ய வேண்டும்.These days people perform it whenever convenient. But if the child is a girl, the Pitta Sangiyam must be done before the Uthaapinjedhi Sangiyam — the Gauri Vratham.
    Why: கம்மவார் பெண்ணின் சீர்கள் ஒரு வரிசை — பிட்ட சாங்கியம் முடிந்த பின்னரே கௌரி விரதம்.A Kammavar girl's seers run in order — the Gauri Vratham only follows once this one is complete.
  2. 2
    வாங்க வேண்டியவைWhat is bought
    முக்கியமாக மூன்று புடவை, ரவிக்கைகள், ஒரு தொட்டில் கொக்கி, 2 தொட்டில் துணிகள், பால் ஊற்றும் சங்கு, எண்ணெய் பாத்திரம், ஒரு கரண்டி, ஒரு செம்பு, ஒரு குடம் ஆகியவை. பெண் வீட்டாரின் வசதியைப் பொறுத்து, பாத்திரங்களும் குழந்தைக்கு நகையும் வாங்க வேண்டும்.Chiefly three pudavais and ravikkais, a cradle hook, two cradle cloths, a conch for pouring milk, an oil vessel, a ladle, a sembu and a kudam. Depending on what the girl's family can afford, vessels and jewellery for the child are also bought.
  3. 3
    சீர் மூட்டை கட்டுதல்Tying the seer bundle
    ஒரு சதுரமான புதுத் துண்டில் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவி, அதில் ஒரு தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, சந்தன வில்லை, குங்குமச் சிமிழ், 5 எலுமிச்சம் பழம், மஞ்சள் சரடு 3 பிடி, தொட்டில் கொக்கி, சங்கு, ஒரு புடவை, ரவிக்கை, சுண்டு காரம் எனப்படும் சுக்கு, வசம்பு, மிளகு, ஜாதிக்காய், பூண்டு சேர்த்த பொடி ஆகியவற்றுடன் பணம் வைத்துக் கட்ட வேண்டும். இந்த மூட்டையைப் பெண்ணின் சகோதரர் எடுத்து வர வேண்டும்.A new square cloth is smeared with turmeric at its four corners and tied into a bundle holding a coconut, vetrilai-paaku, flowers, a sandal cake, a kungumam box, five lemons, three lengths of turmeric thread, the cradle hook, the conch, a pudavai and ravikkai, and the powder called sundu-kaaram (dry ginger, vasambu, pepper, nutmeg and garlic), along with money. The girl's brother must carry this bundle.
  4. 4
    மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லுதல்Going to the husband's house
    செம்பில் மஞ்சள் பொட்டு, எண்ணெய் பாத்திரத்தில் எண்ணெயும், குடத்தில் சக்கரையும் போட்டு, புதுப் பாத்திரத்தில் இனிப்பு, காரம், வெற்றிலை பாக்கு வைத்து அனுப்ப வேண்டும். இந்தச் சீருக்குப் பழம் வைப்பதில்லை. நல்ல நேரத்தில் பெண் புது புடவையை உடுத்திக் கொள்ள வேண்டும். 5 சுமங்கலிகள் பெண்ணை வாசலில் கிழக்கு நோக்கி நிறுத்தி மஞ்சள் பூசி, பூ வைத்து, மஞ்சள் சரடு கட்டிவிட்டுத் தாங்களும் பூ வைத்து, பொட்டு வைத்து, மஞ்சள் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம் வைத்து, தாங்களும் எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கு வாசற்படியில் ஆரத்தி எடுத்துக் குழந்தையும் தாயும் வரவேற்க வேண்டும்.A turmeric dot is put on the sembu, oil in the oil vessel, sugar in the kudam, and sweets, savouries and vetrilai-paaku in a new vessel. No fruit is placed for this seer. At an auspicious hour the woman wears a new pudavai. Five sumangalis stand her at the doorway facing east, apply turmeric, place flowers and tie the turmeric thread — then do the same for themselves. Vetrilai-paaku and lemon are placed in her lap, and they set out for the husband's house, where mother and child are welcomed with aarathi at the threshold.
  5. 5
    சீர் நிறைவுCompleting the seer
    சீர் மூட்டையைப் பூஜை அறையில் வைத்துக் கும்பிட்டு, மூட்டையை அவிழ்த்து, அதில் உள்ள புடவையை எடுத்து மாப்பிள்ளையின் தாய் அல்லது சகோதரி கட்டிக் கொண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம், பூ ஆகியவற்றை எடுத்துத் தட்டில் வைக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்கள் 5 பேர், பெண்ணிற்கு மஞ்சள் பூசிப் பொட்டு வைத்து, மஞ்சள் சரடு கட்டி விட்டு, வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம் கொடுத்து, அவர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அன்றோ அல்லது வேறு ஒரு நல்ல நாளில் மற்றொரு புடவையைத் தாய் வீட்டிற்குச் சென்று கட்டிக் கொண்டு வர வேண்டும். இத்துடன் கம்ம குலப் பெண்ணிற்குச் செய்யும் சாங்கியம் நிறைவு பெறும்.The bundle is set in the puja room and worshipped, then opened; the groom's mother or sister wears the pudavai from it, and turmeric, kungumam, vetrilai-paaku, lemon and flowers are placed on a plate. Five sumangalis of the husband's house apply turmeric to the woman, place her pottu, tie her turmeric thread and give her vetrilai-paaku and lemon, taking the same themselves. Then, that day or on another auspicious day, she goes to her mother's house and returns wearing another pudavai. With this, the cycle of seers performed for a Kamma woman is complete.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Childhood

மொட்டை கொட்டேதி (முடி இறக்குதல்)Mottai Kottedhi (First Tonsure)

பிறந்த குழந்தையின் தலை உச்சி, மென்மைத் தன்மை மாறி வலுப் பெற்றதும், முடி இறக்குதல் செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 7, 9 அல்லது 11 ஆம் மாதங்களில், அவரவர் குலதெய்வக் கோயிலில் இச்சாங்கியம் செய்ய வேண்டும்.Once the soft crown of a newborn's head has firmed and grown strong, the first tonsure is done — in the child's 7th, 9th or 11th month, at the family's own kula deivam temple.
  1. 1
    ஏற்பாடுகள்Preparations
    நல்ல நாள் பார்த்து தாய் வீட்டார், குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் புத்தாடைகள் எடுக்க வேண்டும். கோயிலில் திருமஞ்சனம் செய்ய, பொங்கல் வைக்கச் சாமான்கள் வாங்க வேண்டும்.An auspicious day is chosen and the mother's family buys new clothes for the child and the parents, along with provisions for the thirumanjanam and the pongal at the temple.
  2. 2
    தாய்மாமன் மடியில்In the maternal uncle's lap
    தாய்மாமன் மடியில் குழந்தையை உட்கார வைத்து முடி இறக்க வேண்டும்.The child is seated in the maternal uncle's (thaai maaman's) lap and the hair is removed.
    Why: கம்மவார் சீர்களில் தாய்மாமனுக்கே முதல் இடம் — குழந்தையின் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் அவர் உடன் இருக்கிறார்.The maternal uncle holds pride of place in Kammavar seers — he is present at every step of the child's life.
  3. 3
    காது குத்துதல்Ear piercing
    முடி இறக்கும் நாளில் காதும் குத்தலாம்; அதற்குக் கம்மல் வாங்க வேண்டும். பின் குழந்தையைக் குளிக்க வைத்து புதுத் துணிகள் அணிவித்து, காது குத்தி கம்மல்கள் அணிவிக்க வேண்டும்.The ears may be pierced on the same day, and kammal (earrings) are bought for it. The child is then bathed, dressed in new clothes, and the kammal put on.
    Why: மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றிய குலம் — அக்கம்மலையே குழந்தையின் காதிலும் சூட்டுகிறோம்.A kulam born from Mahalakshmi's kammal puts that very kammal on its child's ears — see the name-origin on the History page.
  4. 4
    ஆசீர்வாதமும் விருந்தும்Blessing and the feast
    பூஜைகள் முடித்துக் கொண்டு, குழந்தையையும் பெற்றோரையும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும். பின்னர் எல்லோருக்கும் விருந்து கொடுத்து அனுப்ப வேண்டும்.The pujas are completed, the child and the parents are blessed, and everyone is sent off with a feast.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Festival

கௌரி விரதம்Gauri Vratham

கௌரி அம்மனுக்கு — ரேணுகா தேவியின் மகள் — பெண் குழந்தைகள் இருக்கும் விரதம். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பௌர்ணமிக்கு அடுத்த மூன்றாவது நாளிலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பௌர்ணமிக்கு அடுத்த மூன்றாவது நாளும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை கம்மவார் தத்தெலு பண்டக, உத்தாபின, அசுன்ய சயன விரதம் எனவும் வழங்குவர். பெண் குழந்தையின் 7, 9 அல்லது 11 ஆம் வயதில் இச்சீர் செய்யப்படும்.The girls' vratham for Gauri Amman — daughter of Renuka Devi — kept in Aavani and Purattasi on the third day after the full moon, and once in three years on the third day after the Aippasi full moon. Also called Kammavar Thatthelu Pandaga, Uthaapina, or Asanya Sayana Vratham. It is observed by a girl child in her 7th, 9th or 11th year.

கம்மவார் குலப் பெண்கள் உத்தாபின சீர் செய்யக் காரணம்Why Kammavar girls keep the Uthaapina Seer

கௌரியம்மன் தெய்வமாகி விடுகிறாள். ஆதலால் அம்மிக்கல்லே கௌரியம்மனாகப் பூஜிக்கப்படுகிறது. அப்பொழுது கௌரியம்மன் ஒரு வாக்கு தருகிறாள்: “ஏழு குலப் பெண் குழந்தைகள் விரதம் இருந்து என்னை வணங்குவார்கள். அவர்களில் ஆறு பேர்களது விரதம் செல்லும். கம்மவார் வம்சத்தில் பிறந்த பெண் குழந்தை அக்கம்மாவின் விரதம் மட்டும் செல்லாது போய்விடும். அதனால் கம்மவார் குலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 7, 9, 11 ஆம் வயதுகளில் ஏதாவது ஒரு வயதில் ‘உத்தாபின சீர்’ செய்ய வேண்டும்.” பின்னர் கௌரியம்மன் பூமியில் ஐக்கியம் ஆனாள்.Gauri Amman became divine and merged into the ammikkal (the grinding stone) — which is why she is worshipped in that very form to this day. Before she merged into the earth she gave her word: girls of seven kulams would keep her vratham, and for six of them it would be fulfilled — but for the girl born of the Kammavar line alone, it would not. For her, an 'Uthaapina Seer' would have to be done in her 7th, 9th or 11th year.

தொடக்க காலத்தில் பிராமண குலம், கம்மவார் குலம், கோமுட்டி குலம், கொல்ல குலம், பலிஜவார் குலம், பட்ராஜு குலம், உடையார் குலம் ஆகிய ஏழு குலத்தில் பிறந்த குழந்தைகளும் தத்தம் 7, 9, 11 வயதுகளில் கௌரி விரதம் இருந்தனர். கம்மவார் குலப் பெண் குழந்தை அக்கம்மாள் தனது அண்ணன்மார் மூவரோடு வாழ்ந்து வந்தாள். அவர்கள் தங்களது ஒரே தங்கையான அக்கம்மாள் மீது மிகுதியான பாசம் கொண்டிருந்தனர். அக்கம்மா உரிய வயதினை அடைந்ததும், கௌரி விரதம் வைத்துச் சாமி கும்பிட முடிவு செய்தனர். விரதத்தைக் கடைபிடிக்கின்ற மற்ற ஆறு குல பெண் குழந்தைகளையும் தமது வீட்டிற்கே வரவழைத்து விரதம் இருக்கச் செய்தனர்.In the early days, girls of seven kulams — Brahmana, Kammavar, Komutti, Kolla, Balijavar, Batraju and Udaiyar — kept the vratham in their 7th, 9th or 11th year. A Kammavar girl, Akkammal, lived with her three elder brothers, who doted on their only sister. When she came of age they arranged her Gauri vratham and invited the girls of the other six kulams to keep it at their home.

பகல் முழுதும் விரதம் மேற்கொண்டதால் அக்கம்மாள் பசி மயக்கத்திற்கு ஆளானாள். விவசாயிகளான அண்ணன்மார்கள் மாலையில் வீடு திரும்பி, பசி மயக்கம் உள்ள தங்கையின் நிலை கண்டு வேதனைக்கு ஆளாயினர். இரவு நிலவு உதித்த பின்னர் நிலாவைப் பார்த்து வணங்கிய பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் அதுவரை தமது தங்கை பசி பொறுக்க மாட்டாள் என எண்ணி, நிலா உதித்து விட்டதாக நம்ப வைத்து விரதத்தை முடிக்கச் செய்ய ஒரு உபாயத்தை மேற்கொண்டனர்.The rule was that the vratham could be broken only after the moon rose at night and was worshipped. But having fasted all day, Akkammal grew faint with hunger. Her brothers, farmers, returned at evening and could not bear to see her that way — so they worked a trick to make her believe the moon had already risen.

ஒரு அண்ணன் அரசமரத்தில் ஒரு கண்ணாடியைக் கட்டி வைத்தார். மற்ற அண்ணன் அதன் எதிரிலிருந்த புளியமரத்தில் தீயை உண்டாக்கினார். கண்ணாடியில் புளியமரத்து நெருப்பு “நிலா” கிளம்பி வருவது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கியது. பின்னர் அண்ணன்மார்கள் அக்கம்மாவை வீட்டிற்கு வெளியில் அழைத்து வந்து, “இதோ பார், நிலா உதித்து விட்டது. நீ நிலாவைக் கும்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்” என்றனர். தான் கண்ட நிலாத் தோற்றத்தை உண்மை என நம்பிய அக்கம்மாள், நிலாவை வணங்கி, விரதத்தை முடித்துக் கொண்டு, படுத்து உறங்கி விட்டாள்.One brother tied a mirror on a peepal tree; another lit a fire in the tamarind tree facing it. The firelight caught in the mirror looked exactly like a moon rising. They led her out and said, 'Look — the moon is up. Worship it and finish your vratham.' Believing what she saw, she worshipped, broke her fast and slept.

வானத்தில் உண்மையாக உதித்த நிலாவைக் கண்ட பிற குலக் குழந்தைகள் ஆறு பேரும் அக்கம்மாவின் வீட்டிற்கு வந்தனர். “எங்கள் அக்கம்மா நிலவைப் பார்த்து கும்பிட்டு விரதம் முடித்து விட்டாள்” என்றனர் அண்ணன்மார்கள். “இப்போது தானே நிலா உதித்தது. உங்கள் அக்கம்மா எப்படி விரதம் முடிக்க முடியும்?” என்று கேட்டு மிகுதியான வேதனைக்கும் சினத்திற்கும் ஆளாயினர். “முறையான விரதம் மேற்கொள்ளாத அக்கம்மாவின் கௌரி விரதம் செல்லுபடியாகாமல் போகட்டும். உங்கள் கம்மவார் குலத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 7, 9, 11 ஆம் வருடங்களில் ‘உத்தாபின சீர்’ செய்ய வேண்டும்” என்று சாபம் இட்டனர். அக்கம்மாவின் விரதத்திற்கு அவளது அண்ணன்மார்களால் பங்கம் ஏற்பட்டதால், ‘உத்தாபின சீர்’ செய்யும்பொழுது சகோதரர்கள் அருகில் இருக்கக் கூடாது என்ற நியதி ஏற்பட்டது.When the real moon rose, the six girls of the other kulams came to the house and were told Akkammal had already finished. 'The moon has only just risen — how could she have finished?' they asked. Hurt and angered, they laid a curse: let the vratham of the girl who did not keep it properly go unfulfilled, and let the girls born in the Kammavar kulam have to perform the Uthaapina Seer in their 7th, 9th or 11th year. And because it was her own brothers who spoiled her vratham, the rule remains: brothers must not be present when the Uthaapina Seer is performed.

  1. 1
    விரதம் இருப்பவர்கள்Who keeps it
    உற்றார் உறவினர் சுற்றத்தாரை அழைத்தல் வேண்டும். வயதான சுமங்கலிப் பெண்கள் மூவரும், ஆடவர் இருவரும் (இரண்டு தம்பதிகள், ஒரு சுமங்கலி என ஐவர்) குழந்தையுடன் சேர்ந்து விரதம் இருத்தல் வேண்டும்.A girl child in her 7th, 9th or 11th year, together with five elders who keep the vratham with her — three elderly sumangali women and two men (two couples and one sumangali). Relatives are invited.
    Why: குழந்தை தனியாக விரதம் இருப்பதில்லை — குடும்பமே அவளுடன் சேர்ந்து இருக்கிறது.The child is never alone in it — the vratham is kept by the family around her.
  2. 2
    சூரிய உதயத்திற்கு முன்Before sunrise
    சூரியன் உதிப்பதற்கு முன்னரே ஐவரும் குழந்தையை நடுவில் உட்கார வைத்து, தலைவாழை இலை போட்டுச் சிற்றுண்டி சாப்பிட வேண்டும். பகலில் சாப்பிடக் கூடாது. குழந்தை பகலில் தூங்கக் கூடாது. ஊஞ்சல் கட்டிக் கொடுத்து விளையாடச் செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் நாளில் அக்குழந்தை வாசற்படியினையோ, நிலைப்படியினையோ தொடவோ, மிதித்து நடக்கவோ கூடாது.All five sit with the child in the middle, a thalaivazhai leaf is laid, and they eat a light tiffin. Nothing is eaten during the day. The child must not sleep in the daytime; a swing is tied for her to play on. She must not touch or step on the threshold that day.
  3. 3
    மாலை நீராட்டும் அலங்காரமும்Evening bath and adorning
    அன்று மாலையில் குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து அரப்பு வைத்து மஞ்சளைத் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். புத்தாடை அணியச் செய்ய வேண்டும். தலைவாரி, பூச்சூட்டிக் குழந்தையை நன்கு அலங்கரிக்க வேண்டும். நெற்றியில் நாமம் வைக்க வேண்டும்.The child is bathed with oil, arappu and turmeric, dressed in new clothes, her hair combed and flowers tucked in, well adorned, with naamam on her forehead.
  4. 4
    கௌரி அம்மன் வடிவம்Gauri Amman's form
    அம்மிக்கல்லை சுத்தம் செய்து படுக்க வைத்து, அரைக்கும் குழவியை நிற்க வைத்து, மஞ்சளில் கண், மூக்கு, வாய், காது வைத்து மலர்களாலும் நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும். அதனையே கௌரியம்மனாக உருவகித்து வணங்க வேண்டும்.The ammikkal is cleaned and laid down and the grinding stone (kuzhavi) stood upon it. Eyes, nose, mouth and ears are marked in turmeric, and it is adorned with flowers and jewellery, then worshipped as Gauri Amman herself.
    Why: கௌரியம்மன் அம்மிக்கல்லில் ஐக்கியம் ஆனவள்.Gauri Amman merged into the ammikkal — so the stone itself is shaped into her form and worshipped.
  5. 5
    கோயிலுக்குச் செல்லுதல்To the temple
    மாலையில் விரதம் மேற்கொண்ட பெரியோர்கள் ஐவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு, உற்றார் உறவினர்களுடன் கௌரி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கௌரி அம்மனுக்கென்று தனியான கோயில் கிடையாது; ஊரில் உள்ள கோயிலிலோ அல்லது வாழும் இல்லத்திலோ கௌரி அம்மனை அலங்கரித்து வழிபடலாம். அவ்வூரில் விரதம் மேற்கொண்ட குழந்தைகள் பலரும் ஒரே இடத்தில் சேர்ந்து கௌரி அம்மனை ஒன்றாகவும் வணங்கலாம்.The five who kept the vratham take the child, with relatives, to Gauri Amman. There is no separate temple for her — she may be adorned and worshipped at the village temple or at home, and all the children keeping the vratham in that village may gather in one place and worship together.
  6. 6
    கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டியனWhat is carried
    ஒரு தட்டில் வாழை இலை போட்டு அதில் ஐந்து எண்ணிக்கையில் உப்பட்டு, கஜ்ஜாயம், உப்பில்லாத தோசை, பணியாரம், வடை ஆகியவற்றை வைத்து மற்றொரு இலையால் மூட வேண்டும். அதனோடு ஒரு கிண்ணத்தில் உப்பில்லாத பருப்பு சாதம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம், அரளி, வில்வம், மல்லிகை, தாமரை, துளசி முதலிய உதிரிப்பூக்கள், நவதானியம் முதலியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மஞ்சள் தடவிய முன்னூலில் அரளிக்காய் ஒன்றினைக் கட்டி, குழந்தையின் வயதிற்கேற்ப (7, 9, 11) முடிச்சுகள் போட வேண்டும்.A plate with a vaazhai leaf holding five each of uppittu, gujjayam, salt-free dosai, paniyaram and vadai, covered with another leaf; a bowl of salt-free paruppu satham; thengai, pazham, vetrilai-paaku, oodhupathi, karpooram, arali, vilvam, malligai, thaamarai, thulasi and navadhaniyam. An arali-kaai is tied in a turmeric-smeared thread with as many knots as the child's age (7, 9 or 11).
  7. 7
    கதை கேட்டல்Hearing the story
    கொண்டு சென்ற பூசைப் பொருள் அனைத்தையும் கௌரியம்மனின் முன்னால் படைத்து வணங்க வேண்டும். விரதம் இருக்கும் குழந்தைகளும் பெரியோர்களும் அங்கு கூறும் கௌரியம்மனின் கதையை அமைதியாகவும் பக்தி சிரத்தையுடனும் கேட்க வேண்டும். கதை கேட்டு முடிந்த பின், கொண்டு போன பலகாரங்களில் கொஞ்சம் ஸ்ரீ கௌரிக்குச் சமர்ப்பித்து விட்டு, கொஞ்சம் உதிரிப் பூக்கள், அரளிக் கொம்பு, அரளிக்காய் ஆகியவற்றை மட்டும் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.Everything is offered before Gauri Amman. The children and elders listen to Gauri Amman's story, told quietly and with devotion. Afterwards a little of the offerings is left with Sri Gauri; only some loose flowers, an arali sprig and the knotted arali-kaai are carried home.
    Why: கதையே இதன் மையம் — ஒவ்வொரு தலைமுறையும் நினைவில் நிற்கும் வயதில் அதைக் கேட்கிறது.The story is the point — each generation hears it at the age it will remember.
  8. 8
    பெரியோர்களின் பாதம் கழுவுதல்Washing the elders' feet
    வீட்டிற்கு வந்ததும், விரதம் மேற்கொண்ட பெரியோர்கள் ஐந்து பேரும் வாசலில் கிழக்கு நோக்கி நிற்க வேண்டும். பெண் குழந்தை நிறை குடத்தில் உள்ள நீரை ஒரு செம்பில் நிரப்பி அவர்களது பாதங்களைக் கழுவ வேண்டும். பின்னர் பாதங்களில் சந்தனம், குங்குமம் வைத்து மலர் இட்டு, கால்களைத் தொட்டுக் கும்பிட வேண்டும்.At home the five stand at the doorway facing east. The girl washes their feet with water from a full pot poured into a sembu, applies sandalwood and kungumam, offers flowers, touches their feet and bows.
  9. 9
    நிலா வணங்குதல்Worshipping the moon
    வானத்தில் நிலாத் தோன்றியதும், வீட்டில் உள்ள பெண்கள் குழந்தையைப் பெரியவர் ஐவர் நடுவில் நிற்க வைத்து, எல்லோரது கைகளிலும் அரளிக் கொம்பு கொடுத்துக் கையை விரிக்கச் சொல்லி, மோர் விட்டு நிலாவைப் பார்த்துக் கும்பிடச் சொல்ல வேண்டும். மூன்று முறை கும்பிட்ட பின்னர், அரளிக் கொம்பைக் கீழே போட வேண்டும். பெரியவர்கள் குழந்தையை வாழ்த்த வேண்டும்.When the moon truly appears, the women of the house stand the child among the five elders, place an arali sprig in every hand and have them open their palms, pour mor, and look at the moon and worship — three times. The arali sprig is then set down and the elders bless the child.
    Why: அக்கம்மாள் காணாத உண்மையான நிலாவைத் தான் இன்று ஒவ்வொரு கம்மவார் பெண்ணும் காத்திருந்து வணங்குகிறாள்.The honest moon Akkammal never saw is the one every Kammavar girl now waits for.
  10. 10
    மாவிளக்குThe mavilakku
    வீட்டில் தலைவாசலில் கோலம் போட்டு நிலைப்படியில் குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைக்க வேண்டும். குழந்தைக்குப் பின்னால் இரண்டு சுமங்கலிகளும், முன்னால் ஒரு சுமங்கலியும் நின்று, சின்னதாகச் செய்த மூன்று மாவிளக்குகளில் திரி போட்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும். முன்னால் நிற்கும் சுமங்கலி “முடிமுடி தாராலு இந்தாண்டம்மா” எனச் சொல்லி பின்னால் நிற்பவரிடம் கொடுக்க, அவர் “முள்ளா தாராலு தெச்சுண்டம்மா” என்று பாடிக் கொடுக்க, முன்னால் நிற்பவர் ஒரு மாவிளக்கை குழந்தையின் வாயில் போட்டு, மெல்லாமல் விழுங்கச் சொல்ல வேண்டும். இதுபோல மூன்று முறை செய்து மூன்று மாவிளக்குகளையும் விழுங்கச் சொல்ல வேண்டும்.A kolam is drawn at the doorstep and the child stands on the threshold facing east — two sumangalis behind her, one in front. Three small mavilakkus are made and lit with ghee wicks. The sumangali in front sings 'முடிமுடி தாராலு இந்தாண்டம்மா' and passes the plate back; the one behind receives it with 'முள்ளா தாராலு தெச்சுண்டம்மா' and places a mavilakku in the child's mouth, to be swallowed without chewing. This is done three times, for all three.
  11. 11
    அரளிக்காய் கட்டுதலும் உணவும்Tying the arali-kaai and eating
    மூவரும் சேர்ந்து குழந்தையின் வலது கையில் முடிச்சிட்ட அரளிக்காயைக் கட்ட வேண்டும். பின்னர் விரதம் இருந்த ஐவரும் குழந்தையோடு அமர்ந்து சாப்பிட வேண்டும்; குழந்தை ஐவருக்கும் நடுவில் அமர வேண்டும். ஐவரும் முதலில் உப்பட்டு, வடை, கஜ்ஜாயம், பழம், நெய் சேர்த்துப் பிசைந்து ஆளுக்கு ஒரு கை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். சாதம், பருப்பு, சாம்பார், ரசம், காய்கறி, அப்பளம் ஆகியன படைக்கப்படுதல் வேண்டும். எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன், ஆறு பேரது சாப்பிட்ட இலைகளைக் குழந்தையே எடுக்க வேண்டும். பின்னர் பெரியோர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்க வேண்டும்.The three together tie the knotted arali-kaai on the child's right hand. All five then come inside and eat with the child seated in the middle. They first mix uppittu, vadai, gujjayam, pazham and ghee and each give her a handful. As all have fasted, satham, paruppu, sambar, rasam, kaikari and appalam are served. When everyone has eaten, the child alone clears the six leaves, and vetrilai-paaku is given to the elders.
  12. 12
    மறுநாள் காலைThe next morning
    மறுநாள் காலையில் குழந்தையைக் குளிக்க வைத்து, ஆடை உடுத்தி, அலங்கரித்து, பூஜைப் பொருட்களோடு (தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, கற்பூரம், ஊதுபத்தி, நவதானியம்) கௌரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பூஜை முடிந்தவுடன் கையில் கட்டிய அரளிக்காய் நூலை அவிழ்த்து சாமி முன் வைக்க வேண்டும். அங்கு பூஜித்த மலர்களுடன் அந்த அரளிக்காயையும் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து கிணற்றில் (கங்கம்மா) விட வேண்டும் — “மஞ்சிமஞ்சி பூவுலு கௌரம்மகு, வாடின பூவுலு கங்கம்மகு”. செல்லும் வழியில் 3 இடங்களில் பூத்தட்டை வைத்து கும்மி தட்ட வேண்டும். அடுத்த ஆண்டு விரதம் இருக்க வேண்டிய குழந்தைகளும் (6, 8 வயதினர்) உடன் சேர்ந்து கொள்வர்.The child is bathed, dressed and adorned and taken to the Gauri Amman temple with thengai, pazham, vetrilai, paaku, poo, karpooram, oodhupathi and navadhaniyam. After the pooja the thread on her hand is untied and placed before the goddess, and the arali-kaai is carried with the worshipped flowers and dropped into a well (Gangamma) — 'மஞ்சிமஞ்சி பூவுலு கௌரம்மகு, வாடின பூவுலு கங்கம்மகு'. On the way the flower-tray is set down at three places and kummi is clapped. Children due to keep the vratham next year (aged 6 and 8) join in.
  13. 13
    உத்தாபின சீர் நிறைவேறியமைCompleting the Uthaapina Seer
    சீர் செய்த அடுத்த ஆண்டு கௌரி விரதத்திற்குரிய நாள் வரை குழந்தையோடு விரதம் மேற்கொண்ட ஐவரும் நலமாக இருத்தல் வேண்டும்; அப்போது தான் விரதம் பூர்த்தியாகும். அடுத்த ஆண்டு கௌரிவிரத நாளில் குழந்தையைக் குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி அலங்கரித்து கௌரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பூ, தேங்காய், பழத்துடன் ஒரு தட்டில் புதிய புடவை, ரவிக்கைத் துணி வைத்துக்கொண்டு சென்று, அம்மனின் முன் வைத்து நன்றி செலுத்தி வணங்க வேண்டும். பின்னர் விரதம் இருந்த ஐவருக்கும் நல்லெண்ணெய், பருப்புடன் புதிய பாத்திரங்களில் பலகாரம் கொடுத்தனுப்ப வேண்டும்.The five who kept the vratham with the child must remain well until the Gauri vratham day of the following year — only then is the vratham complete. On that day the child is bathed, dressed and taken again to Gauri Amman with flowers, coconut, fruit and a new pudavai and ravikkai. Thanks are offered for the seer being fulfilled, and good sesame oil, paruppu and palakaaram in new vessels are given to the five.

நம் முன்னோர்கள் கூறிய காரணம்The reason our elders gave

நம் முன்னோர்கள், எந்த ஒரு சீரினையும் சடங்கினையும் காரணகாரியங்கள் இன்றி வெறும் பொழுது போக்கிற்காகக் கடைப் பிடிக்கவில்லை. கம்மவார் குலத்தினரும், எல்லாச் சீர்களையும் சடங்குகளையும் வாழ்க்கையின் வழிகாட்டும் நெறிகளாகவே கடைபிடித்து வந்துள்ளனர்.Our ancestors did not keep any seer or ceremony without cause, merely to pass the time. The Kammavar kulam has kept every seer as a guiding path for life.

பெண் குழந்தையின் முதல் பருவம் பேதைப் பருவம் (7, 9 வயது). அந்த வயதில் குழந்தையின் மனதில் தம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல வேரூன்றும். எனவே அந்த வயதில் கடைபிடிக்கப்படுகின்றன. “உத்தாபின சீரால்” அக்குழந்தையின் உள்ளத்தில் விரதத்தின் நன்மை, பெரியோர்களை மதித்தல், உறவினர் சூழ்ந்திருத்தல், தெய்வ வழிபாடு ஆகிய நல்ல பண்புகள் வேரூன்றுகின்றன. குழந்தை வளர வளர நல்ல பண்புகளும் அவளோடு சேர்ந்து வளர்கிறது. அவளால், பிறந்த வீடும் புகுந்த வீடும் நலம் பெறுகின்றன.A girl child's first stage is the pedhai paruvam (around 7 to 9). At that age whatever happens around her slowly takes root in her mind — which is why these are kept precisely then. Through the Uthaapina Seer, the good of the vratham, respect for elders, the feeling of being surrounded by relatives, and devotion take root in her heart. As she grows, those qualities grow with her — and through her, both the home she is born into and the home she marries into prosper.

எல்லாம் வல்லவளாகிய பராசக்தியின் வடிவமாகிய — கம்மவார் குலத்தில் எல்லம்மாவாகிய ரேணுகா தேவியின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும், அவள் மகள் கௌரி அம்மனும் துணையிருப்பாள்.In this the Kammavar kulam receives the grace of Renuka Devi — the form of the all-powerful Parasakthi — and her daughter Gauri Amman stands beside them too.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Coming of Age

பயிண்டு சாங்கியம் (மாராப்பு சீர்)Payindu Sangiyam (Maraappu Seer)

ஒரு பெண் குழந்தை தான் ஒரு பெண்ணாக உருமாறிக் கொண்டிருப்பதை உணர்த்தும் சடங்குதான் “பயின்டேசேதி” என்னும் மாராப்புச் சீர் ஆகும். ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் தவிர பிற மாதங்களில், ஒரு நல்ல நாள் பார்த்து இச்சடங்கைச் செய்யலாம். பெண்ணின் ஒன்பதாவது வயதில் செய்யப்படும்.The rite called 'Payindedhi' — the Maraappu Seer — is the one that marks a girl beginning to become a woman. It may be done in any month except Aadi, Purattasi and Maargazhi, on an auspicious day, in her ninth year.
  1. 1
    உறவினர் கூடுதல்The family gathers
    பெண்ணின் ஒன்பதாவது வயதில், ஒரு நல்ல நாளில், தாய் மாமா, மாமி, பாட்டி, தாத்தா எல்லோரும் சேர்ந்து பெண்ணை அழைத்து வந்து, புதிய புடவை, ரவிக்கை, நகை முதலியவை வாங்கி வந்து, உறவினர்களை அழைத்துச் சடங்கு செய்ய வேண்டும்.In her ninth year, on an auspicious day, the maternal uncle and aunt, grandmother and grandfather all come together, bring the girl, buy a new pudavai, ravikkai and jewellery, and invite the relatives for the rite.
  2. 2
    எண்ணெய் ஸ்நானம்The oil bath
    தாய் மாமாவின் மனைவி, பெண்ணிற்கு எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மனைப்பலகை போட்டு, ஜமக்காளம் விரித்து அமர வைத்து, ஒரு தட்டில் சேலை, ரவிக்கை, வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம், பூ ஆகியவற்றைக் கொடுத்து, சந்தனம், குங்குமம் வைத்துப் பூச்சூட்ட வேண்டும்.The maternal uncle's wife gives the girl an oil bath. A manaipalagai is set down, a jamakkalam spread, and she is seated; a plate with a saree, ravikkai, vetrilai-paaku, lemon and flowers is given, sandalwood and kungumam applied, and flowers placed in her hair.
  3. 3
    மாராப்பு புடவை கட்டுதல்Draping the maraappu
    பெண்ணை அழைத்துப் போய், புடவைக்கு மஞ்சள் வைத்து, ஒரு முனையில் வெற்றிலை பாக்கு, பவுன் அல்லது பணம் வைத்து முடிந்து, வலதுபுறம் மாராப்பு வருமாறு புடவை கட்டி விட வேண்டும்.The girl is taken aside, turmeric is applied to the pudavai, vetrilai-paaku and a sovereign or money are knotted into one end, and the saree is draped so that the maraappu falls over the right shoulder.
    Why: மாராப்பு தான் இச்சடங்கின் மையம் — குழந்தை பெண்ணாகிறாள் என்பதை ஆடையே அறிவிக்கிறது.The maraappu is the whole point — the garment itself announces that the child is becoming a woman.
  4. 4
    ஆசீர்வாதம்The blessing
    பெண்ணை மனைப்பலகையில் அமர்த்தி, குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து, தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் எல்லோரும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும். 5 அல்லது 7 அல்லது 9 தட்டுகளில் வெற்றிலை பாக்கு, பழம், பலகாரம் எல்லாம் வைக்க வேண்டும்.She is seated on the manaipalagai, kuthuvilakkus are lit, and the grandfather, grandmother and all the relatives bless her. Five, seven or nine plates are laid with vetrilai-paaku, fruit and palakaaram.
  5. 5
    வீடு திரும்புதல்Returning home
    நல்ல நேரத்தில், பெண்ணை மாமா, மாமி, அம்மா வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். அங்கு வாசலில் நிறுத்தி ஆர்த்தி எடுக்க வேண்டும். பூஜை அறையில் போய் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுச் சந்தனம், குங்குமம் கொடுக்க வேண்டும்.At an auspicious hour the uncle, aunt and mother bring her home. She is stood at the doorway and aarathi is taken. In the puja room camphor is lit, the deity worshipped, and sandalwood and kungumam given.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Coming of Age

ருது மங்கள சீர்Ruthu Mangala Seer

நம் குலப் பெண்ணின் பருவமடைதல் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு வந்தது. ருதுவான நாள், நேரம், நட்சத்திரம் குறித்து ஜாதகம் கணிப்பதும் வழக்கம்.A girl of our kulam coming of age was marked with great honour. It is also customary to note the day, time and natchathiram of her ruthu and to cast her horoscope from it.
  1. 1
    முதல் நாள்The first day
    ருதுவானவுடன் பெண்ணிற்கு மாமி முறை உள்ளவர்கள் ஸ்நானம் செய்வித்து, பால், பழம், சக்கரை சேர்த்துக் கலந்து தர வேண்டும்.As soon as she comes of age, the women who stand as maami bathe her and give her milk, fruit and sugar mixed together.
  2. 2
    தாய்ச்சீர்The mother's seer
    பின்னர் தாய்ச்சீர் செய்யப்படும். பெண்ணிற்கு நீராடி, தாய் எடுக்கும் புதுப் புடவை, நகை அணிவித்து, ஒரு இடத்தில் அமரச் செய்ய வேண்டும். இருபுறமும் குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து சீர்த் தட்டுகள் வைக்க வேண்டும்.Then the thaai-cheer is performed. She is bathed, dressed in the new pudavai and jewellery her mother has brought, and seated in one place, with kuthuvilakkus lit on both sides and the seer plates set out.
  3. 3
    முக்கிய சடங்குப் பொருள்The central offering
    ஐந்து படி நெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு அச்சு பனைவெல்லம் அதன் மேல் வைக்க வேண்டும். இது தான் முக்கிய சடங்குப் பொருளாகும். சுமங்கலிப் பெண்கள், பெண்ணிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து இனிப்பு தருவார்கள்.Five padi of paddy are put in a vessel and two moulds of palm jaggery placed on top — this is the central object of the rite. The sumangalis apply turmeric and kungumam to her and give her sweets.
  4. 4
    தனிக் குடில்The separate hut
    தாய்மாமனால் அமைக்கப்பட்ட கம்மந்தட்டுகளால் ஆன குடிலில், பெண்ணைத் தனியே இருக்கும்படி செய்வார்கள்.In a hut built by the maternal uncle from kammanthattu (millet-stalk screens), she is given a place to stay apart.
  5. 5
    சீர் செய்தல்Completing the seer
    அன்றோ அல்லது மூன்று மாதம் கழித்தோ, ஒரு நல்ல நாளில், தாய்மாமனால் பெண் வீட்டில் முன் கூறியபடி சீர் செய்ய வேண்டும்.That same day, or three months later on an auspicious day, the maternal uncle performs the seer at the girl's house as described above.

தனிக் குடில் ஏன்?Why the separate hut?

உடல்ரீதியாகத் திருமணத் தகுதி பெற்றுவிட்ட பெண்ணுக்கு மனரீதியாகவும் வலிமை வேண்டும்; பெற்றோரை விட்டுத் தனித்து இருக்கும் வலிமையை வரவழைக்கவும், சுகாதாரம் கருதியும், அச்சமயத்தில் முழுமையான ஓய்வு தேவை என்பதாலும் பெண்ணைத் தனியே குடில் கட்டி வைக்கும் முறை வழக்கத்தில் இருந்து வந்தது.A girl who has become physically ready for marriage needs to be ready in mind too. The custom of building her a hut of her own came from four reasons together: to call up in her the strength to be apart from her parents, out of care for hygiene, and because complete rest is what she truly needs at that time.

ஆனால் இன்றைய காலத்தில் வேகமாய் மாறிவரும் வாழ்க்கைச் சூழலில், நம் அனைவரும் இந்தச் சடங்கை மறந்தும் மறுத்தும் வருகிறோம்.But in today's fast-changing way of life, we have all been forgetting this rite — and refusing it.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Wedding

முடிப்பு (நிச்சயதார்த்தம்)Muddupu (Engagement)

‘நிச்சயதார்த்தம்’ என்பதைத்தான் நம் சுந்தர தெலுங்கில் ‘முடிப்பு’ என்று குறிப்பிடுவார்கள். இரண்டு மனங்களும், இரண்டு குடும்பங்களின் பந்தங்களும் சேரும் ஒரு தொடக்க விழா. மங்கலப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மூட்டை கட்டி ஒரு முடிப்புச் செய்வதால் இதற்கு முடிப்பு என்று சொல்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து முடிப்பு (மூட்டை) எடுத்துச் சென்று பெண் வீட்டில் கொடுக்க, பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டு தம் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க ஒப்புக் கொள்வர்.What is called 'Nichayathaartham' is 'Muddupu' in our Telugu. It is the opening ceremony where two hearts and two families' bonds come together. Because auspicious things are gathered and tied into a bundle — a muddupu (knot) — the ceremony takes that name. The groom's family carry the muddupu bundle to the bride's house; the bride's family accept it and agree to give their daughter in marriage.
  1. 1
    குலதெய்வ வழிபாடு (மாப்பிள்ளை வீட்டில்)Kula deivam worship (at the groom's house)
    முதலில் மாப்பிள்ளை வீட்டில் குலதெய்வத்தை வைத்து வழிபட வேண்டும். பூஜை அறையில் பெருமாள், தாயார் படத்தை வைத்து, முன் ஒரு மனைப்பலகையில் மாக்கோலம் போட்டு, வலது பக்கத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பலகையில் தலைவாழை இலை போட்டு, பச்சரிசி பரப்பி, ஒரு செம்பில் ஜலம் விட்டு துளசி, பூக்கள், 5/7/9 இலைகள் உள்ள மாவிலைக் கொத்தை வைத்து, ஒரு தேங்காயை குடுமி மேல் நோக்கி, கண்கள் முன்னால் இருக்கும்படி வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சளில் காது, கண், மூக்கு வரைந்து, பட்டுப்பாவாடை உடுத்தி, மஞ்சள் சரடு போட்டு, மல்லிகைப்பூ மாலை சாத்தி, கம்மல் மூக்குத்தி போன்ற நகைகளால் அலங்கரிக்க வேண்டும். இரண்டு குத்துவிளக்கை ஏற்றி, பெருமாள், குலதெய்வத்துக்குத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம் வைக்க வேண்டும்.First the kula deivam is worshipped at the groom's house. In the puja room, before the pictures of Perumal and Thayar, a plank is set with a maakolam and a turmeric Pillaiyar to its right. On the plank a thalaivazhai leaf is laid, raw rice spread, a sembu of water set with thulasi, flowers and a cluster of 5/7/9 mango leaves; a coconut is placed tuft-up with its two 'eyes' facing front. Ear, eye and nose are drawn on it in turmeric; it is dressed in a pattu-paavaadai, wound with turmeric thread, garlanded with jasmine and adorned with kammal and mookuthi. Two kuthuvilakku are lit, and coconut, fruit, vetrilai-paaku and lemon offered to Perumal and the kula deivam.
  2. 2
    ஒதிப்பணம்Othipanam (the pledge coins)
    குலதெய்வத்துக்கு ஒதிப்பணமாக 11 காசுகளை மஞ்சள் துணியில் அட்சதை, துளசி, பூக்களோடு வைக்க வேண்டும். பலபத்ர சாமிக்கும் காணிக்கையாக 1 ரூபாய் வைக்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு, பின் பெருமாள், தாயார், குலதெய்வங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.As othipanam (a pledge), 11 coins are placed before the kula deivam in a turmeric cloth with achathai, thulasi and flowers, and one rupee is offered to Balabhadra Swami. Puja is done first to Pillaiyar, then to Perumal, Thayar and the kula deivam.
  3. 3
    முடிப்பு மூட்டை கட்டுதல்Tying the muddupu bundle
    ஒரு சதுரமான பட்டு அல்லது நூல் துணியில் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி, சுபவேளையில் இரு சுமங்கலிகள் கிழக்கு பார்த்து அமர்ந்து துண்டை விரித்து, அதில் ஒரு தேங்காய், ஒரு சீப்பு பழம் (ஒற்றைப்படையில்), வெற்றிலை, பாக்கு, 5 விரலி மஞ்சள் கொம்பு, 11 சந்தன வில்லை, 5 எலுமிச்சம் பழம், 200 கிராம் கல்கண்டு, 2 நாமக்கட்டி, அட்சதை அரிசி, குங்குமச்சிமிழ், மல்லிகைப்பூ, ஒதிப்பணம் ஆகியவற்றை வைத்து மூட்டையாகக் கட்டி, முக்காலியின் மேல் வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் பெண் வீட்டுக்கு 5 சுமங்கலிகள் முதலில் செல்ல வேண்டும்; சிறிது நேரம் கழித்து தாயாதிகளில் பெரியவர்கள் முடிப்பு மூட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.On a square silk or cotton cloth, turmeric is smeared at the four corners; at an auspicious hour two sumangalis sit facing east and spread it, placing on it a coconut, a hand of bananas (odd number), vetrilai, paaku, five finger-lengths of turmeric, 11 sandal wafers, 5 lemons, 200g kalkandu, 2 naamakattu, achathai rice, a kungumam box, jasmine and the othipanam — tied into a bundle, set on a tripod and worshipped. Five sumangalis go to the bride's house first; a little later the senior relatives carry the muddupu bundle.
  4. 4
    பெண் வீட்டில் — பரிமாற்றம்At the bride's house — the exchange
    பெண் வீட்டிலும் பூஜை அறையில் குலதெய்வத்தை நிறுத்தி வழிபட வேண்டும். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த 5 சுமங்கலிகளை வரவேற்று குங்குமம், பூ, மஞ்சள் சரடு கொடுக்க வேண்டும். பெரியவர்கள் கொண்டுவந்த முடிப்பு மூட்டையை முக்காலியின் மேலுள்ள தட்டில் வைக்க வேண்டும். சுமங்கலிகள் மூட்டையைப் பிரித்து, கற்பூரம் ஏற்றிப் பூஜை செய்து ஒதிப்பணத்தை எடுத்து குலதெய்வத்திடம் வைக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் முக்காலி மேல் உள்ள தட்டில் நிச்சயதார்த்தம் செய்வதற்காகப் பணம் வைப்பார்கள்; பெண் வீட்டார் அத்தட்டை எடுத்து, சிறிது பணம் கூடுதலாக வைத்து மீண்டும் வைக்க வேண்டும்.At the bride's house too the kula deivam is set and worshipped. The five sumangalis from the groom's side are welcomed with kungumam, poo and turmeric thread. The muddupu bundle carried by the elders is placed on the tripod plate. The sumangalis open it, light camphor, do puja, and set the othipanam with the kula deivam. The groom's family place money on the tripod plate for the engagement; the bride's family take the plate, add a little more, and set it back.
  5. 5
    திருமண நாள் நிச்சயம்Fixing the wedding day
    முடிப்புச் செய்யும் நாளன்றே திருமண நாளையும் நிச்சயம் செய்வார்கள். மாப்பிள்ளை வீட்டார் மூடிய செம்பில் 1¼ படி நெய், ஒரு பாத்திரத்தில் 5/7/9 படி நெல், வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொம்பு, எலுமிச்சை, பூ, குங்கும சிமிழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இரு வீட்டாரும் அமர்ந்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டும் என பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டும். கல்யாண நாள், நலங்கு, முஹூர்த்த நேரங்கள் எல்லாம் இரண்டு தாள்களில் எழுதி, மஞ்சள் தடவி, தலா ஒன்று பெற்றுக்கொள்ள வேண்டும்.The wedding day is fixed on the same day as the muddupu. The groom's family bring, in a covered sembu, 1¼ padi ghee, and in a vessel 5/7/9 padi paddy with vetrilai-paaku, turmeric pieces, lemon, poo and a kungumam box. Both families sit and the groom's family ask the bride's family to fix the wedding date. The kalyana day, nalangu and muhurtham timings are written on two papers, smeared with turmeric, and one kept by each family.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Wedding

திருமணத்திற்கு முன்Before the Wedding

முடிப்புக்குப் பின், திருமணத்திற்கு முன் செய்யப்படும் சாங்கியங்கள் — உப்பு & ஜவுளி வாங்குதல், தாலிக்காசு, மாப்பிள்ளைக்கு உருமாலை சாங்கியம், பெண்ணுக்கு மெட்டி அணிவிக்கும் சாங்கியம், மற்றும் நலங்கு.The seers done after the muddupu and before the wedding — buying salt & cloth, the thaali-kaasu, the groom's Urumaalai Sangiyam, the bride's toe-ring (Metti) Sangiyam, and the Nalangu.
  1. 1
    உப்பு & ஜவுளிSalt & cloth (Uppu & Javuli)
    உப்பு ஒரு மங்களப் பொருள் ஆகும்; எனவே திருமணச் செலவினங்களில் முதலில் வாங்குவது உப்பு தான். ஒரு நல்ல நாளில் அதிகாலை வேளையில், மாப்பிள்ளை வீட்டார் முதலில், பின்னர் பெண் வீட்டார் உப்பு வாங்க வேண்டும். 5 சுமங்கலிகள் ஒரு பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பூ, எலுமிச்சை, குங்குமம் வைத்துக் கொண்டு போய், 5/7/9 படி உப்பு போட்டு, மேலே பூ, எலுமிச்சை, கல்கண்டு, வெற்றிலை பாக்கு, சந்தன வில்லை, குங்குமம், மஞ்சள் கொம்பு வைத்து, மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்கி வர வேண்டும். வீட்டில் பூஜையறையில் ஜலமூலையில் வைத்துப் பூஜை செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் கொடுக்க வேண்டும். உப்பு வாங்கிய அன்றோ வேறு நல்ல நாளிலோ மணமக்களுக்குரிய புத்தாடையும், மாங்கல்யத்தையும் வாங்கலாம்.Salt is an auspicious thing, so the very first wedding purchase is salt — at dawn on a good day, the groom's family first, then the bride's. Five sumangalis go with a vessel of vetrilai, paaku, poo, lemon and kungumam, add 5/7/9 padi of salt, top it with poo, lemon, kalkandu, vetrilai-paaku, sandal wafer, kungumam and turmeric pieces, pay in full and bring it home. It is set at the jalamoolai in the puja room, worshipped, and the sumangalis given turmeric-kungumam. On the salt day or another good day, the couple's new clothes and the maangalyam are bought.
  2. 2
    தாலிக்காசுThe thaali-kaasu
    நகைக் கடைக்குச் சென்று லக்ஷ்மி காசினை வாங்கி, அங்கேயே குழி அடித்துத் தரும்படி வாங்க வேண்டும். ‘குண்டக்காசு’ என்று சொல்லப்படும் குழிக்காசு தான் நம் கம்மவாருக்குரிய தாலிக்காசு ஆகும். தாலிக்காசு வாங்கிய பின் பூஜை அறையில் வைத்துக் கும்பிட வேண்டும்.At the jewellery shop a Lakshmi kaasu is bought and hollowed there. This kundakkaasu (hollowed coin) is the Kammavar thaali-kaasu. After buying, it is kept in the puja room and worshipped.
    Why: மகாலட்சுமியின் காசு — கம்மவார் தாலியின் இதயம்.A coin of Mahalakshmi — the heart of the Kammavar thaali.
  3. 3
    உருமாலை சாங்கியம் (மாப்பிள்ளை)Urumaalai Sangiyam (the groom)
    மாப்பிள்ளைக்கு அவரின் தாய் மாமனால் செய்யப்படும் சாங்கியம். ஒரு நல்ல நாளில் தாய் மாமன் வந்து மணமகனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, பட்டு வேட்டியை பஞ்ச கச்சம் வைத்துக் கட்டி, வெள்ளை-சிவப்பு நாமம் வைக்க வேண்டும். உருமாலை கட்டும் வேட்டியில் ஒரு முனையில் 2 வெற்றிலை, பாக்கு, அட்சதை, பணம் வைத்து முடித்து உருமாலை கட்ட வேண்டும்; சிறிய பூச்சரம் தொங்கவிட வேண்டும். புதிய வெண்பட்டு சட்டை, பஞ்சகச்ச வேட்டி அணிந்து, தோளில் அங்கவஸ்திரம் துலங்க, உயர்ந்த தலைப்பாகை அணிந்து நாமம் தரித்து விளங்குபவரே கம்மகுல மணமகனாவார். தாய் மாமன், மணமகனின் வலது காலில் முதலில் மெட்டி அணிவித்து, பின் இடது காலில் அணிவித்து, அட்சதை தூவி ஆசீர்வதிக்க வேண்டும். உருமாலை சாங்கியம் செய்த பின்பு மணமகன் வீட்டை விட்டு வெளி இடங்களுக்குச் செல்லக்கூடாது.The seer done for the groom by his maternal uncle. On a good day the uncle takes him home, gives an oil bath, ties a pattu veshti in pancha-kachcham style and applies a white-and-red naamam. In one end of the urumaalai veshti he knots 2 vetrilai, paaku, achathai and money, ties the urumaalai and lets a small poochcharam hang. In a new white silk shirt, pancha-kachcham veshti, an angavastram shining on the shoulder, a tall thalaippaagai and naamam, he stands as the Kamma-kula groom. The uncle puts metti on the groom's right foot first, then the left, sprinkles achathai and blesses. After the Urumaalai Sangiyam the groom must not go out of the house.
  4. 4
    மெட்டி அணிவிக்கும் சாங்கியம் (பெண்)Metti Sangiyam (the bride's toe-rings)
    திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே மணமகளைத் தாய் மாமன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். காலை நேரத்தில், கிழக்கு பார்த்து மனைப்பலகை போட்டு, பெண்ணை அமர வைத்து, அத்தை, பாட்டி மற்றும் 3/5 சுமங்கலிகள் பெண்ணின் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். பின் நீராட்டி, புதிய புடவை, நகைகளை அணியச் செய்து அலங்கரித்து நெற்றியில் நாமம் தரிக்க வேண்டும். இரண்டு விளக்குகள் ஏற்றி 7/9 சீர்த்தட்டுகள் (வெற்றிலை பாக்கு, பழம், இனிப்பு, பூ, தேங்காய்) வைத்து, மணமகளை முன்னால் நிற்க வைக்க வேண்டும். தாய்மாமன் அல்லது தாய்மாமனின் மனைவி, மணமகளின் வலது காலில் முதலிலும் பின்பு இடது காலிலும் மெட்டி அணிவிக்க வேண்டும். பெரியவர்கள் ஆசீர்வதித்து, தலைவாழை இலையில் விருந்துண்ண வைத்து, சீர்த்தட்டுகளுடன் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.A day or two before the wedding the bride is brought to her maternal uncle's house. In the morning, facing east, she is seated on a plank and the aunt, grandmother and 3–5 sumangalis oil her hair; she is bathed, dressed in a new pudavai and jewellery, adorned, and given naamam. Two lamps are lit and 7 or 9 seer plates set out (vetrilai-paaku, fruit, sweets, poo, coconut), and she is stood in front. The uncle or his wife puts metti on her right foot, then the left. The elders bless her, she is feasted on a thalaivazhai leaf, and taken with the seer plates to her home.
  5. 5
    நலங்குNalangu
    ‘நலங்கு’ என்ற சொல்லின் அடிப்படை ‘நலம்’ என்பது. நன்மை பெருகவும், இன்பம் பொங்கவும், பெரியவர்களும் உறவினர்களும் மணமக்களை மங்கலப் பொருட்களைக் கொண்டு வாழ்த்தும் சடங்கே நலங்கு — நம் கம்மவார்களின் சிறப்பு எனக் கருதப்படும், திருமணத்தின் ஆரம்ப அறிகுறி. நலங்கு மாவு என்பது பச்சரிசியும் பாசிப்பயறும் சம அளவில் எடுத்து, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கொம்புடன் துளசி இலைகளையும் சேர்த்துத் தயாரிக்க வேண்டும். மணமேடையைச் சுத்தப்படுத்திக் கோலமிட்டு, தூய வெள்ளை வேஷ்டியை விரித்து, மனைப் பலகை வைத்து, குத்துவிளக்குகளில் மல்லிகைப் பூவைச் சுற்றி ஏற்ற வேண்டும். மணமகன் மணமேடையை மூன்று முறை சுற்றி வலது புறம் அமர, மணமகளும் விளக்கு முக்காலி தட்டுடன் சுற்றி மாப்பிள்ளைக்குப் பின்புறமாக இடது புறத்தில் அமர வேண்டும்.The word 'nalangu' comes from nalam — well-being. The rite in which elders and relatives bless the couple with auspicious things is the nalangu — held to be the Kammavars' special mark and the opening sign of a wedding. Nalangu flour is raw rice and green gram in equal parts with kasturi turmeric, turmeric powder or turmeric pieces, and thulasi leaves. The manamedai is cleaned, a kolam drawn, a pure white veshti spread, a plank set, and kuthuvilakku wound with jasmine and lit. The groom circles the manamedai three times and sits on the right; the bride circles with the lamp-tripod and sits to his left, behind him.
  6. 6
    நலங்கிடும் முறைHow the nalangu is applied
    நலங்கு மாவு தொட்டு, நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்து, அட்சதை அரிசி எடுத்து, வளர்ச்சியைக் காட்டும் விதமாகக் கீழிருந்து மேல் நோக்கிக் கால், தோள், தலையில் விழும்படி, இரு கைகளாலும் நலங்கு வைத்து மணமக்களை வாழ்த்தி இறைவனை வணங்க வேண்டும். மணமக்களுக்குத் தாய் மாமன் முறையில் உள்ளவர்கள் முதலில் நலங்கு வைக்க வேண்டும்; பின்னர் மற்ற பெரியவர்களும் சுமங்கலிகளும் வைக்க வேண்டும். இந்த நலங்குச் சீர் நடை பெறும்போது மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்த இரண்டு சுமங்கலிகள் தாலிச்சரடுகள் மஞ்சள் நூல் போட்டுத் தாலிக்காசினைக் கோர்த்து வைக்க வேண்டும். நலங்கு நிறைவு பெற்றவுடன், மாப்பிள்ளை வீட்டார் ஒரு தட்டில் முகூர்த்தப்புடவை, மாலை, செண்டு, பாசிகம், வெற்றிலை பாக்கு, பூ, எலுமிச்சம் பழம் வைத்துப் பெண் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் நலங்குப் பாடல்கள் பாடிச் சிறப்பிப்பது வழக்கம்.Dip in the nalangu flour, put sandal-kungumam on the forehead, take achathai and — showing growth, from below upward — touch the couple's feet, shoulders and head with both hands, bless them and worship God. The maternal-uncle's line applies it first, then the other elders and sumangalis. During the nalangu two sumangalis of the groom's side put turmeric thread on the thaali-cords and string the thaali-kaasu. When the nalangu ends, the groom's family give the bride's family a plate with the muhurtha pudavai, garland, sendu, paasikam, vetrilai-paaku, poo and lemon. Relatives celebrate with nalangu songs.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Wedding

மண்டப ஆயத்தம் (தோரணம் & அரிமனை)Preparing the Mandapam (Thoranam & Arimanai)

மணமேடையை மணத்திற்கு ஆயத்தம் செய்யும் சாங்கியங்கள் — தோரணச் சாங்கியம் மற்றும் அரிமனைச் சாங்கியம் (முளைப்பாரி).The seers that make the mandapam ready for the wedding — the Thoranam Sangiyam and the Arimanai Sangiyam (mulaippaari).

தோரணம் — ஆண்டாள் பாட்டில்The thoranam — in Andal's song

“நாளை வதுவை மணமென்று நாளிட்டுப் / பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ் / தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்” என்று ஆண்டாள் தன் பாட்டில் குறிப்பிடுகிறார். நம் கம்மகுலத்தில் குறிப்பிடும் தோரணம் என்பது வலைப்பின்னல் போன்ற அமைப்பில் நூல் சுற்றப்பட்டு, பச்சை அல்லது சிவப்புப் பட்டுத் துணியில் வேலைப்பாடுகள் உடையதாக விளங்கும் மரச்சட்டமே. இது தெலுங்கு வண்ணாரிடம்தான் இருக்கும்; நலங்கு முடிந்ததும் தோரணம் கட்ட வேண்டும்.Andal refers to it in her song: 'Tomorrow is the wedding day, they said and fixed the day / under the areca-palm, gift-laden pandal / I dreamt, my friend, the thoranam being raised.' The thoranam of our Kamma kulam is a wooden frame with a net-like weave of thread, worked over in green or red silk cloth. It is kept by the Telugu vannaar (washerman); once the nalangu is done, the thoranam is tied.

  1. 1
    தோரணச் சாங்கியம்Thoranam Sangiyam
    நலங்கு முடிந்ததும் தோரணம் கட்ட வேண்டும். மண்டப வாசலில் உள்ள பந்தலுக்கு வெளியில் வண்ணார் மாத்து விரித்து, அதன் மேல் தோரணத்தை வைக்க வேண்டும். வாத்தியக்காரர்கள் வாத்தியம் வாசிக்க, பந்தமும் பிடிக்க வேண்டும். வண்ணார் கையில் வைத்திருக்கும் தோரணத்துக்கு சந்தனம், குங்குமம், அட்சதை வைத்து, வண்ணாருக்குப் பொட்டிட்டு, தேங்காய் உடைத்து தோரணத்திற்குப் பூஜை செய்ய வேண்டும். பின்னர் மஞ்சள் நீர் சுற்றித் தோரணத்தை பந்தலில் கட்டச் செய்ய வேண்டும். தட்டில் உள்ள அரிசி, சாப்பாடு, தேங்காய், பழங்களுடன் காணிக்கையும் வைத்து வண்ணாருக்குக் கொடுக்க வேண்டும்.After the nalangu the thoranam is tied. Outside the pandal at the mandapam entrance the vannaar spreads the maathu cloth and sets the thoranam on it. Musicians play and hold the pandam. On the thoranam in the vannaar's hands sandanam, kungumam and achathai are placed; a pottu is put on the vannaar, a coconut broken, and puja done to the thoranam. Turmeric water is circled and the thoranam tied to the pandal. The rice, food, coconut and fruit from the plate, with a kaanikkai, are given to the vannaar.
  2. 2
    அரிமனைச் சாங்கியம் (முளைப்பாரி)Arimanai Sangiyam (mulaippaari)
    நிறைவான வாழ்வினைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது இந்த அரிமனைச் சாங்கியம்; இதனை ஒட்டிய முளைப்பாரி வைக்கும் முறையை, வளமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே, 2 சிறிய மண்தொட்டியில் செம்மண், மணல், எருப்பொடி மூன்றையும் கலந்து இரண்டு மண்தொட்டியின் உள்ளே போட வேண்டும். அதில் நெல், பாசிப்பயறு, கம்பு, கோதுமை ஆகியவற்றைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து தூவி விட வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து, மூன்றாவது நாளில் இருந்து தினமும் சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் இது நன்றாக வளர்ந்துவிடும்.The Arimanai Sangiyam is taken as a sign of a full, complete life, and the mulaippaari planted with it stands as an emblem of fertility. Ten days before the wedding, red soil, sand and manure are mixed and filled into two small mud-tubs. Paddy, green gram, kambu and wheat are stirred well with water and sown in them. They are watered daily, and from the third day set out briefly in the sun each day; within a week they grow well.
    Why: வாழையடி வாழையாகக் குலம் தழைக்கவும், மனித இனம் தொடரவும் — வளர்ச்சியின் அடையாளம்.That the kulam may flourish generation upon generation and the human race continue — an emblem of growth.
  3. 3
    பானை & முளைப்பாரி அமைத்தல்Setting the pots & mulaippaari
    மணமகனின் அறையில், ஜலமூலையில் தலைவாழை இழை போட்டுப் பெரிய பானைகளை வைத்து, அதன் மேல் சிறிய பானைகளை வைக்க வேண்டும். பானைகளைச் சுற்றி முளைப்பாரி தொட்டிகளை வைக்க வேண்டும். வெள்ளை, கருப்பு கம்பிளி நூலுடன் மஞ்சள் நூல் சேர்த்துத் திரித்து மஞ்சள் கொம்பு கட்டி, இதுபோல் மூன்று செய்து, இரண்டைப் பெரிய பானைகளின் கழுத்தில் கட்டி, மற்றொன்றைச் சிறிய மண் கலயத்தில் கட்டி பானைகளின் முன்புறம் வைக்க வேண்டும். பானைகள் முன்புறம் 5 விளக்குத் தண்டுகளில் விளக்குகளை வைத்து, மஞ்சள் குங்குமம் வைத்து ஏற்ற வேண்டும். மூன்று சுமங்கலிகள் தண்ணீர் கொண்டுவந்து மண்கலயத்தில் ஊற்றிப் பூஜை செய்ய வேண்டும்.In the groom's room, at the jalamoolai, thalaivazhai fibre is laid, big pots set and smaller pots placed on them, with the mulaippaari tubs arranged around. White and black wool with turmeric thread is twisted and a turmeric piece tied — three of these are made; two are tied to the necks of the big pots and one to a small mud kalayam set in front. Before the pots, five lamp-stands are set with lamps and turmeric-kungumam and lit. Three sumangalis fetch water, pour it into the mud kalayam and do puja.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Wedding

சுப முஹூர்த்தம்The Muhurtham (the wedding)

நம் கம்மகுல வழக்கப்படி, மணமேடையில் நடக்கும் சடங்குகள் — மாப்பிள்ளை ராஜு மொக்கு, மாப்பிள்ளை அழைப்பு, கங்கணம் கட்டுதல், தாரை வார்த்தல், மாங்கல்ய தாரணம், தலபார் அரிசி, மாலை மாற்றல் ஆகியன.By our Kamma-kula custom, the rites performed on the manamedai — the groom's Raju Mokku, inviting the groom, tying the kankanam, tharai vaarthal (giving the bride), the maangalya dharanam (thaali), the thalapaar rice, and the exchange of garlands.
  1. 1
    மாப்பிள்ளை ராஜு மொக்குMappillai Raju Mokku (the groom's blessing)
    நம் வாழ்வில் முக்கியமான செயல்களுக்குச் செல்லும் முன் பெரியவர்களிடம் ஆசி பெறுவது நம் குல வழக்கம்; அதுபோல் மாப்பிள்ளை கோலம் கொண்ட மணமகன், திருமணம் செய்வதற்கு முன்பு பிள்ளையார் கோவிலுக்குச் செல்வது நம் மரபு. கோவிலுக்குச் செல்லும் முன், மாப்பிள்ளை துணை மாப்பிள்ளையுடன் வந்து மண்டப வாயிலில் உள்ள பந்தலில், தோரணத்தின் கீழ் நிற்க வேண்டும். பெண் வீட்டாரின் தாயாதிகள் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் நிற்க, அவர்கள் கையில் 2 வெற்றிலை, 2 பாக்கு கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை விளக்கைப் பார்த்துக் கும்பிட்டவுடன், திரும்பிப் பார்க்காமல் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றுவிட வேண்டும். விளக்குத் திரியில் இருந்து கறுப்புப் பொட்டு எடுத்து, மாப்பிள்ளையின் இடது கன்னத்தில் சிறியதாக ஒரு பொட்டு வைக்க வேண்டும்.Getting elders' blessings before important acts is our custom; so the groom, in his groom-form, goes to the Pillaiyar temple before the wedding. First he stands with the best-man under the thoranam at the mandapam entrance. The bride's relatives — men on one side, women on the other — are given 2 vetrilai and 2 paaku in hand. The groom looks at the lamp, worships, and without turning back goes to the Pillaiyar temple. A black dot is taken from the lamp-wick's soot and a small pottu placed on his left cheek (to ward off the evil eye).
  2. 2
    மாப்பிள்ளை அழைப்புInviting the groom
    தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகனை வரவேற்கும் முதல் சடங்கு தான் மாப்பிள்ளை அழைப்பு. பெண் வீட்டார், வாத்தியங்களுடன், சீர்த் தட்டுகளுடன் பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாருக்குப் பூஜை செய்த பின், மாப்பிள்ளை வீட்டுச் சுமங்கலிகள் 5 பேருக்கு மஞ்சள் குங்குமம், பூ, பொங்கு நூல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை கொடுக்க வேண்டும். ஒரு தேங்காய் எடுத்து மாப்பிள்ளை தலையைச் சுற்றி சிதறுகாய் போட்டு, துணை மாப்பிள்ளை குடை பிடிக்க, மாப்பிள்ளையை முகூர்த்தத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மணமகளின் தந்தை மாப்பிள்ளைக்கு மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும்; பிறகு மைத்துனர் மோதிரம் அல்லது வேறு நகை போட வேண்டும். மணப்பெண்ணின் தங்கை முறை உள்ள பெண், மாப்பிள்ளையின் பாதங்களை கழுவிவிட வேண்டும். மணமகளின் தாயார் மாப்பிள்ளைக்குப் பாலும் பழமும் கொடுத்து, ஆர்த்தி சுற்றி, பொட்டு வைத்தபின் மாப்பிள்ளை மணமேடைக்குப் போக வேண்டும்.The first rite of welcoming the son-in-law who will come to one's house. The bride's family, with musicians and seer plates, go to the Pillaiyar temple. After Pillaiyar puja, the groom's-side 5 sumangalis are given turmeric-kungumam, poo, pongu thread, vetrilai-paaku and lemon. A coconut is circled round the groom's head and broken; the best-man holds an umbrella and the groom is led to the muhurtham. The bride's father garlands the groom in honour, then gives a maiththunar ring or another jewel; the bride's sister-line girl washes the groom's feet; the bride's mother gives him milk and fruit, circles aarathi, places a pottu — and the groom goes to the manamedai.
  3. 3
    கங்கணம் கட்டுதல்Tying the kankanam
    மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்களைப் புரோகிதர் சொல்ல, மணமகன் துணை மாப்பிள்ளையுடன் மணமேடையை மூன்று முறை வலம் வந்து வலது காலை முன்வைத்து ஏறி நிற்க வேண்டும். மணமகனை மறைத்து நடுவில் திரை பிடிக்க வேண்டும். துணைப் பெண்ணுடன் மணமகள் மணமேடைக்கு வந்து வலதுபுறம் உள்ள மனைப்பலகை மேல் ஏறி நிற்க வேண்டும். மணமகளின் மாமா, பெண்ணின் காலை எடுத்து மாப்பிள்ளையின் கால் மேல் மூன்று முறை வைக்க வேண்டும்; பின்னர் மாப்பிள்ளை காலை எடுத்து பெண்ணின் கால் மேல் மூன்று முறை வைக்க வேண்டும். திரைச்சீலையை நீக்கிவிட, பெண்ணும் மாப்பிள்ளையும் பலகையின் மேல் அமர்ந்த உடன் ஐயர் புண்யாவாசனம் செய்ய வேண்டும். ஐயர் மாப்பிள்ளையின் கையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் கொடுத்து, புறங்கையில் சந்தனம் குங்குமம் வைத்து வலது கையில் கங்கணம் கட்டுவார். பின் மாப்பிள்ளை அவற்றைப் பெண்ணின் கையில் கொடுத்து, பெண்ணின் வலது கையில் கங்கணம் கட்ட வேண்டும். பின்னர் ஹோம பூஜை; அதன் பின் மணமக்கள் தம் பெற்றோருக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்.Amid instrument-sound and the priest's Vedic mantras, the groom with the best-man circles the manamedai three times, steps up right foot first and stands. A screen is held to hide the groom; the bride comes with a companion and stands on the plank on the right. The bride's mama takes her foot and places it on the groom's foot three times, then the groom's foot on hers three times. The screen is removed; once both sit, the aiyar does punyaavaasanam. He gives the groom vetrilai, paaku and coconut, puts sandanam-kungumam on the back of his hand and ties the kankanam on his right wrist; the groom passes them to the bride and ties the kankanam on her right wrist. Then the homa puja, after which the couple do paatha puja to their parents.
  4. 4
    தாரை வார்த்தல்Tharai Vaarthal (kanyadaanam)
    தாம் பெற்ற குலமகளை, தமது உரிமைப் பொருளை பிறருக்கு உரிமையாகத் தரும் சடங்கு தான் தாரை வார்த்தல். ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு பவுன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து, பெண்ணின் தகப்பனார் கொடுக்க, பெண்ணின் தாயார் செம்பில் தண்ணீர் வார்க்க வேண்டும். அப்போது பெண்ணின் தந்தையார் தனது குலம், கோத்திரம், முன்னோர் பெயர் சொல்லித் தன் பெயர் உரைத்து, மணமகனது குலம், கோத்திரம், முன்னோர் பெயருடன் மாப்பிள்ளையின் பெயர் சொல்லி, அவருக்கு தாரை வார்த்துத் தருவதாகக் கூற வேண்டும். மணமகனின் தந்தையும் தனது குலம், கோத்திரம், முன்னோர் பெயர் சொல்லி, தாய் தந்தை இருவரும் சேர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.The rite of giving one's own kula-daughter — one's rightful treasure — into another's keeping. On a plate coconut, fruit, vetrilai, paaku and a sovereign or a rupee coin; the bride's father gives, and her mother pours water from a sembu. The bride's father speaks his kulam, gothram and ancestors' names and his own name, then the groom's kulam, gothram, ancestors' names and the groom's name, and declares he gives his daughter in tharai. The groom's father too speaks his kulam, gothram and ancestors' names, and both fathers accept together.
  5. 5
    மாங்கல்ய தாரணம்Maangalya Dharanam (tying the thaali)
    திருமண பந்தத்தின் அடையாளமாகத் திகழும் தாலியணிவிக்கும் சடங்கே மாங்கல்ய தாரணம். மஞ்சள் நூல் சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கும் மாங்கல்யத்தை ஒரு தேங்காய்க்குச் சுற்றி, ஒரு தட்டில் வைத்து, ஐயர் கற்பூரம் காட்டிப் பூஜை செய்தபின், சபையில் உள்ள பெரியோர்களுக்குக் காண்பிக்க வேண்டும். சகலவாத்தியம் முழங்க மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை, பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டி, மூன்று முடிச்சுகள் போட்டு, முடிச்சின் மீது மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் மாப்பிள்ளை பெண்ணின் தலையைச் சுற்றி கையை வலது பக்கமாகக் கொண்டுவந்து நெற்றியில் போட்டு வைக்க வேண்டும்.The thaali-tying that stands as the sign of the marriage bond. The maangalyam strung on turmeric thread is wound around a coconut, set on a plate; the aiyar shows camphor, does puja, and shows it to the elders in the assembly. Amid the full sound of every instrument the maangalya dharanam is done. The groom ties the maangalyam on the bride's neck with three knots and puts turmeric-kungumam on the knots. Then he passes his hand around her head, brings it to the right and rests it on her forehead.
  6. 6
    தலபார் அரிசிThalapaar Arisi (showering the rice)
    ஒரு தாம்பாளத்தில் ஐந்து படி அரிசியைப் போட்டு, பெண்ணின் இருகைகளையும் தாய்மாமன் பிடித்து அரிசியை அள்ளி மாப்பிள்ளையின் தலைமேல் மூன்று முறை போட வேண்டும். மாப்பிள்ளையும் மூன்று முறை பெண்ணின் தலை மேல் அரிசி போட வேண்டும்.On a thaampaalam five padi of rice; the maternal uncle holds the bride's two hands and, scooping rice, showers it on the groom's head three times. The groom too showers rice on the bride's head three times.
  7. 7
    மாலை மாற்றல் & வலம்Garland exchange & the circling
    மாப்பிள்ளையின் கையில் மாலையைக் கொடுத்து பெண்ணிற்குப் போடச் சொல்ல வேண்டும்; பிறகு பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து மாப்பிள்ளையின் கழுத்தில் போடச் செய்ய வேண்டும் — இதுபோல் மூன்று முறை. மாப்பிள்ளையின் அங்கவஸ்திர நுனியும், பெண்ணின் புடவைத் தலைப்பின் நுனியும் சேர்ந்து முடிச்சுப்போட வேண்டும். மாப்பிள்ளை பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் செல்ல, இருவருமாக மணமேடையை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் மணமேடையின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் அம்மியின் மீது, மாப்பிள்ளை பெண்ணின் வலது காலை எடுத்து மூன்று முறை வைக்க வேண்டும். இச்சடங்கு பெண் கல்போல் அசையாமல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். பின்னர் பந்தலுக்கு வெளியே சென்று சூரியனைப் பார்த்துக் கும்பிட வேண்டும்; அருந்ததியை நினைத்து வானத்தைப் பார்க்க வேண்டும். மணமேடையில் செய்யப்படும் சடங்குகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன.The garland is given into the groom's hand to put on the bride; then into the bride's hand to put on the groom — three times. The end of the groom's angavastra and the end of the bride's pudavai are knotted together. The groom holds the bride's hand and leads; both circle the manamedai three times. Each time, at the ammi (grinding stone) beside the manamedai, the groom takes the bride's right foot and places it on the ammi three times — teaching that the bride should stand firm and unmoving like a stone. Then they go outside the pandal, worship the sun, and look to the sky thinking of Arundhati. With this the rites on the manamedai are complete.
    Why: அம்மியை மிதித்தல் — கல் போல் உறுதி; அருந்ததி — கற்பின் அடையாளம்.Treading the ammi — firmness like stone; Arundhati — the emblem of steadfast fidelity.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Wedding

திருமணத்திற்குப் பின்After the Wedding

முஹூர்த்தத்திற்குப் பின் செய்யப்படும் சாங்கியங்கள் — மணமகள் ராஜு மொக்கு, கங்கணம் அவிழ்த்தல், சாங்கியம் பெட்டேதி (சீர் வைத்தல்), மற்றும் ஆறாம் மாதச் சீர்.The seers done after the muhurtham — the bride's Raju Mokku, untying the kankanam, the seer-giving (Sangiyam Pettedhi), and the sixth-month seer.
  1. 1
    மணமகள் ராஜு மொக்குManamagal Raju Mokku (the bride's blessing)
    நம் குலமகள், ஒளிவிளக்காகப் புகுந்த வீட்டுக்குச் செல்லும் முன் தன் குலத்தைச் சார்ந்த பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் சடங்கு தான் மணமகள் ராஜு மொக்கு. புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்க்கப் புறப்படும் முன், மணமகளைத் தோரணத்துக்குக் கீழ் நிற்க வைத்து, பெண் வீட்டாரின் தாயாதிகள் ஆண்களும் பெண்களும் இருபுறம் நிற்க, அவர்கள் கைகளில் 2 வெற்றிலை, 2 பாக்கு கொடுக்க வேண்டும். தலைவாசல் அருகே ஒரு திரி போட்ட விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பெண் விளக்கைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வலதுபுறம் திரும்பி, திரும்பிப் பார்க்காமல் மாப்பிள்ளை வீட்டிற்குப் புறப்பட வேண்டும்.Before our kula-daughter goes, like a lamp, to the home she enters, she takes the blessings of the elders of her own kulam — the manamagal raju mokku. Before setting out to bring honour to the home she enters, the bride is stood under the thoranam; the bride's relatives, men and women, stand on both sides and are given 2 vetrilai and 2 paaku. A single-wick lamp is lit near the doorway; the bride worships the lamp, turns to the right and, without looking back, sets out for the groom's house.
  2. 2
    கங்கணம் அவிழ்த்தல்Untying the kankanam
    மாப்பிள்ளையும் பெண்ணும் இரு வீடுகளுக்கும் கிரஹப்பிரவேஷத்திற்குச் சென்றுவர வேண்டும். பிறகு தோரணப் பந்தலுக்குக் கீழ் நிற்க வைத்து மணமக்களுக்குத் தங்கை முறை உள்ள பெண், இருவருக்கும் பாதம் கழுவி விட வேண்டும். ஆர்த்தி சுற்றி உள்ளே அழைத்து வர வேண்டும். பின்னர் தோரணப் பந்தலுக்குக் கீழ் நிற்க வைத்து கங்கணம் அவிழ்க்க வேண்டும். ஒரு தட்டில் அரிசி இரண்டு படி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், பால் ¼ டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். மாப்பிள்ளையின் கங்கண முடிச்சின் மீது கொஞ்சம் பால் வைத்துச் சந்தனம், குங்குமம் வைத்து பின்னர் கங்கணத்தை அவிழ்க்கும்படி செய்ய வேண்டும். அவிழ்த்த கங்கணத்தை அரிசித் தட்டில் வைக்க வேண்டும். மாப்பிள்ளை பெண்ணின் கையில் கொடுத்துக் கங்கணத்தை அவிழ்த்து அரிசி தட்டில் வைக்கவும். பின்னர் மாலைகள், பாசிகம் ஆகியவற்றைக் கழற்றித் தட்டில் வைக்கவும்.The groom and bride go to both houses for the gruhapravesham. Then, stood under the thoranam pandal, the bride's sister-line girl washes both their feet; aarathi is circled and they are led in. Then, under the thoranam, the kankanam is untied. On a plate: 2 padi rice, coconut, fruit, vetrilai, paaku, sandanam, kungumam, ¼ tumbler milk. A little milk is put on the groom's kankanam knot with sandanam-kungumam, then it is untied and placed on the rice plate; the groom passes to the bride and hers is untied and placed on the plate. Then the garlands and paasikam are removed onto the plate.
  3. 3
    சாங்கியம் பெட்டேதி (சீர் வைத்தல்)Sangiyam Pettedhi (the seer-giving)
    கல்யாணத்தன்று மாலை, பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குச் சீர் கொண்டு போக வேண்டும். இதற்கு ஒரு மூட்டை தயார் செய்ய வேண்டும் — அதற்குக் ‘கட்டாரி’ என்று தெலுங்கில் சொல்வார்கள். ஒரு சதுரத் துண்டில் அல்லது பட்டுத் துணியில் தேங்காய், பழம், சீப்பு, வெற்றிலை, பாக்கு, நாமக்கட்டி, கல்கண்டு, பூ, எலுமிச்சம் பழம், கண்ணாடி, குங்குமச்சிமிழ், மஞ்சள் சரடு (பொங்கு நூல்) மூன்று பிடி (ஒவ்வொரு பிடியிலும் 11 சரடு), சந்தன வில்லை 9, சீர் பணம் அல்லது பவுன் காசு, மாப்பிள்ளையின் சகோதரிக்குக் கொடுக்கும் புடவை ஆகியவற்றை வைத்துக் கட்ட வேண்டும். இந்த மூட்டையைப் பெண்ணின் சகோதரர் எடுத்துச் செல்ல வேண்டும். மாப்பிள்ளை வீட்டில் பூஜை அறையில் கட்டாரியை வைத்துவிட்டு, மாப்பிள்ளையின் தாயார் அதைப் பிரித்து, சகோதரிக்குப் புடவை கொடுத்துக் கட்டிக்கொண்டபின், மாப்பிள்ளை வீட்டு சுமங்கலி பெண்கள் ஐந்து பேர் பெண்ணிற்கு மஞ்சள் பூசி, பொங்கு நூல் கட்டிவிட்டு வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளையின் சகோதரி பெண்ணிற்கு (பொதுவாகப் பவளம் வைத்த) நகை அணிவித்து மருமகளை வரவேற்பது நம் குல வழக்கம். பின் பெண் சமையல் அறைக்குச் சென்று நல்ல நேரத்தில் உப்பு, மஞ்சள், பாத்திரத்தில் கை வைத்து விட்டுப் பால் காய்ச்ச வேண்டும். அன்று மணமக்கள் கோவிலுக்குச் சென்று வந்த பின், நல்ல நேரத்தில் சாந்தி முஹூர்த்தம் வைத்துக் கொள்ள வேண்டும்.On the wedding evening, seer is taken from the bride's house to the groom's house. A bundle is made — called 'kattaari' in Telugu. In a square or silk cloth are tied: coconut, fruit, a comb, vetrilai, paaku, naamakattu, kalkandu, poo, lemon, a mirror, a kungumam box, turmeric thread (pongu nool) in three pidi (11 threads each), 9 sandal wafers, seer money or a sovereign, and a pudavai for the groom's sister. The bride's brother carries this bundle. At the groom's house it is set in the puja room; the groom's mother opens it, the sister wears the pudavai, and five sumangalis of the groom's house apply turmeric to the bride, tie pongu thread and give vetrilai-paaku and lemon. The groom's sister adorns the bride with jewellery (usually set with coral) to welcome the daughter-in-law — our custom. The bride then goes to the kitchen, at a good time touches salt, turmeric and a vessel, and boils milk. That day the couple visit the temple, and at a good time the shanthi muhurtham is kept.
  4. 4
    ஆறாம் மாதச் சீர்The sixth-month seer
    திருமணம் ஆகி ஆறு மாதம் கழித்து, பெண்ணின் பெற்றோர் மறுவிருந்தளிக்கப் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துச் சீர் வைத்து, மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். இதுவே ஆறாம் மாதச் சீர்; ஆனால் இந்தக் கால மாறுதலுக்கு ஏற்ப மூன்றாம் மாதத்திலேயே இந்த சீர் செய்யப்படுகிறது. ஒரு நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து வந்து, புதுத்துணிகள், பலகாரங்கள், வெற்றிலைபாக்கு, பழம், எலுமிச்சம் பழம் எல்லாம் வைத்து, மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் புகுந்த வீட்டிற்குக் கொண்டுபோய் விட வேண்டும். அன்றே பெண்ணிற்கு மாங்கல்ய சரடை மாற்றி தங்கச் சங்கிலியில் கோர்த்துக் கொள்ளலாம்.Six months after the wedding, the bride's parents host a return-feast, invite the couple, do seer and send them back to the groom's house. This is the sixth-month seer, though with the changing times it is now done in the third month. On a good day, with word to the groom's family, the couple are brought and given new clothes, palakaaram, vetrilai-paaku, fruit and lemon, and three or five sumangalis take them to the home she has entered. That very day the bride's maangalya cord may be changed and strung on a gold chain.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

Pregnancy

வளைகாப்புValaikaappu

வாழையடி வாழையாகக் குலம் தழைக்கவும், மனித இனம் தொடரவும், குழந்தைப்பேறு இன்றியமையாதது. பெண் கருவுற்ற 5, 6, 7 மாதங்களில், ஒரு நல்ல நாள் பார்த்து, பெண் வீட்டார் பெண்ணின் மாமனார், மாமியாரிடம் சீர் செய்து அழைத்து வளையல் அணிவிக்கும் சடங்கே வளைகாப்பு.That the kulam may flourish generation upon generation and the human race continue, childbirth is essential. In the woman's 5th, 6th or 7th month, on a good day, the bride's family do seer with her father-in-law and mother-in-law, invite her and adorn her with bangles — the Valaikaappu.
  1. 1
    அழைப்பும் வரவேற்பும்The invitation and welcome
    பெண் கருவுற்ற 5, 6, 7 மாதங்களில், ஒரு நல்ல நாள் பார்த்து பெண் வீட்டார் கொஞ்சம் பலகாரம், பழங்கள், வெற்றிலை பாக்கு கொண்டுபோய் வைத்துவிட்டு, பெண்ணின் மாமனார், மாமியாரிடம் சீர் செய்து அழைத்துப் போக நாள் குறித்துத் தரும்படி கேட்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் குறிப்பிட்ட தேதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு வகை இனிப்பு, இரண்டு வகை காரம், பழம், பூ, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம், கல்கண்டு, 5 மஞ்சள் கொம்பு வைத்து, முதலில் 5 சுமங்கலி பெண்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்ல வேண்டும்.In the woman's 5th, 6th or 7th month, on a good day, the bride's family take a little palakaaram, fruit and vetrilai-paaku, set them down, and ask her father-in-law and mother-in-law to fix a day to invite her and do the seer. The groom's family arrange a feast on the appointed day: two kinds of sweet, two of savoury, fruit, poo, lemon, vetrilai-paaku, sandanam, kungumam, kalkandu and 5 turmeric pieces; five sumangalis go first to the groom's house.
  2. 2
    பெண்ணை அலங்கரித்தல்Adorning the woman
    மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் புடவை, கண்ணாடி வளையல், பூ, குங்குமம், மஞ்சள் சரடு முதலியவை வாங்கி வைக்க வேண்டும். நல்ல நேரத்தில் பெண், புதுப் புடவை உடுத்தி, அலங்காரம் செய்த பின்னர், 5 சுமங்கலி பெண்கள் வாசலில் வந்து கிழக்கு நோக்கி நின்று பெண்ணிற்கு மஞ்சள் பூசி, பொட்டும் பூவும் வைத்து மஞ்சள் சரடு கட்ட வேண்டும். கிழக்குப் பார்த்து 6 தலைவாழை இழை போட்டு, பெண்ணை நடுவில் உட்கார வைத்து எல்லோரும் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர், இலைகளைப் பெண்ணே எடுக்க வேண்டும்.At the groom's house a pudavai, glass bangles, poo, kungumam and turmeric thread are bought for her. At a good time, dressed in a new pudavai and adorned, five sumangalis stand her at the doorway facing east, apply turmeric, place pottu and poo and tie the turmeric thread. Facing east, six thalaivazhai fibres are laid, the woman seated in the middle, and all eat; afterwards she alone clears the leaves.
  3. 3
    வளையல் அணிவித்தல்The bangle ceremony
    ஒரு அறையில் ஜமக்காளம் விரித்து, மனைப்பலகை போட்டு பெண்ணை அதில் உட்கார வைக்க வேண்டும். இருபுறமும் குத்துவிளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். ஐந்து பெண்கள், பெண்ணிற்கு முதலில் வளையல் போட்டுவிட்டுத் தாங்களும் போட்டுக் கொள்ள வேண்டும். மாமியார் பச்சை, சிவப்பு வளையல் போட்டுச் சரடு கட்டி விட வேண்டும். அவரும் பூ வைத்து சரடு கட்டிக் கொண்டபின், பெண் கையில் ஒரு தட்டினைக் கொடுத்து, அதில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். எல்லோரும் பெண்ணை ஆசீர்வாதம் செய்து மொய்ப்பணம் கொடுக்கலாம். எல்லோரும் வைத்தபின், தட்டில் சந்தனம், குங்குமச்சிமிழ், வெற்றிலை பாக்கு, பூ, 5 எலுமிச்சம் பழம், கல்கண்டு, பணம் வைத்து, மாமனாரும் மாமியாரும் ஆசீர்வாதம் செய்து, தட்டைப் பெண்ணிடம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.In a room a jamakkalam is spread, a plank set and the woman seated on it, with kuthuvilakku lit on both sides. Five women first put bangles on her, then wear their own. The mother-in-law puts green and red bangles and ties the cord; after she ties poo and the cord, a plate is given into the woman's hand with vetrilai-paaku. Everyone blesses her and may give moi money. When all have done so, a plate with sandanam, kungumam box, vetrilai-paaku, poo, 5 lemons, kalkandu and money is blessed by the father-in-law and mother-in-law and given to the woman, and she is sent on.
  4. 4
    பிள்ளையார் கோவில் & பிறந்த வீடுThe Pillaiyar temple & her birth home
    மாப்பிள்ளை வீட்டார் அழைத்துப் போக நாள் குறித்துத் தரும்படி கேட்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போகும்போது பூஜை அறையில் போய் நமஸ்காரம் செய்த பின்னர் எல்லோரிடமும் ‘போய்விட்டு வருகிறேன்’ என்று கூறி விடைபெற்று பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும்; அப்படிப் போகும்போது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது. பெண், தனது பிறந்த வீட்டிற்குச் செல்லும் முன், ஒரு தட்டில் பழம், கற்பூரம், ஊதுபத்தி, மஞ்சள் சரடு (பிள்ளையாருக்கு இடுப்பில் சுற்றும் அளவு), மாலை, கல்கண்டு எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரைக் கும்பிட்டுப் பழம், கல்கண்டு அங்குள்ள சிறிய குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, தாய் வீட்டிற்குப் போக வேண்டும்.The bride's family ask the groom's family to fix a day to take her (to her parents'). On that day a feast is arranged. When leaving, she goes to the puja room, does namaskaram, tells everyone 'I am going and will return', takes leave, and goes to the Pillaiyar temple — and on the way she must not see the groom. Before going to her birth home she takes a plate with fruit, camphor, incense, a turmeric cord (long enough to wind at Pillaiyar's waist), a garland and kalkandu to the Pillaiyar temple; she worships Pillaiyar, gives the fruit and kalkandu to the small children there, and then goes to her mother's home.

Retold from community material shared by the Peelamedu Kammavar Seva Sangam (kammavarthirumanaseva.com), Coimbatore — with our thanks.

These are community traditions passed down through generations, not academic history — customs vary by family and region. Please verify with your elders. More rituals are being added from community sources.